அக்.10ம் தேதி மாவட்ட அளவிலான கேரம் போட்டிகள்: பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்

தூத்துக்குடியில் வருகிற அக்.10ம் தேதி பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தூத்துக்குடி மாவட்ட பிரிவின் சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கான மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து 10.10.2018 அன்று காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.
போட்டிகளில் 1-வது வகுப்பு முதல் ஐந்தாவது வகுப்பு வரை படிக்கும் மாணவ / மாணவியர் இளநிலை பிரிவிலும் (Pre School to 5th), 6–வது வகுப்பிலிருந்து 12-வது வகுப்பு வரை படிப்பவர்கள் முதுநிலைப் பிரிவிலும் (6th to 12th) இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.
போட்டிகள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆகிய பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெறும். இளநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதவிடம் பெறுபவருக்கு ரூ.1000/-ம், இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.500/-ம், மூன்றாம் இடம் பெறுபவருக்கு ரூ.250/-ம் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.2000/- வீதமும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.1000/- வீதமும், மூன்றாம் இடம் பெறுபவருக்கு ரூ.500/-வீதமும், முதுநிலைப் பரிவில் ஒற்றையர் பிரிவில் முதவிடம் பெறுபவருக்கு ரூ.2000/-ம், இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.1000/-ம், மூன்றாம் இடம் பெறுபவருக்கு ரூ.500/-ம் மற்றும் இரட்டையர் பிரிவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ.4000/- வீதமும், இரண்டாம் இடம் பெறுபவருக்கு ரூ.2000/- வீதமும், மூன்றாம் இடம் பெறுபவருக்கு ரூ.1000/-வீதமும், ரொக்கப்பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கப்படும்.
இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் https://www.sdat.tn.gov.in/index.php என்ற இணைய தளத்தில் Online service என்ற மெனுவில் District Level carrom competition என்பதனை சொடுக்கி தங்களுடைய தகவல்களை உள்ளீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் புகைப்படம், கையொப்பம் மற்றும் படிக்கும் பள்ளியிலிருந்து உண்மைச் சான்றிதழினை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இணைய தளத்தில் பதிவு செய்யும் மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதலிடம் பிடிப்பவர் மாநில போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர். மேலும் விபரங்களுக்கு 0461 2321149 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*