கார் விபத்தில் துாத்துக்குடி கப்பல் கேப்டன் உட்பட 5பேர் பலி : ஊட்டியில் நிகழ்ந்த சோகம்

ஊட்டியில் மாயமான உட்பட 5 சுற்றுலா பயணிகள் கார் விபத்தில் உயிரிழந்தனர். இதில் துாத்துக்குடியை சேர்ந்த இளைஞரும் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் ஜூட் ஆன்டோ  கெவின் (33). சென்னையில், கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். இவர், நண்பர்கள் இப்ராஹிம்(36), ராமராஜேஷ்(37), ரவிவர்மா(38), அமர்நாத்(36), ஜெயக்குமார்(37), அருண்(37) ஆகியோருடன் கடந்த 30ம் தேதி ஊட்டிக்கு சுற்றுலா வந்தார்களாம். தனியார் ஹோட்டலில் தங்கிய அவர்கள், மறுநாள் (அக்.,1) அன்று முதுமலை செல்வதாக கூறி சென்றனர். ஆனால், அவர்கள் அறைக்கு திரும்பாத காரத்தினால், நிர்வாக தரப்பில் ஊட்டி எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் சென்ற கார் ஊட்டி – கல்லட்டி சாலையில் 35வது கொண்டை ஊசி வளைவு அருகே கவிழ்ந்து விபத்திற்குள்ளானது தெரிய வந்தது. இதில் ரவிவர்மா, இப்ராஹிம், அமர்நாத், ஜெயக்குமார், ஜூட் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராமராஜேஷ், அருண் ஆகிய இருவரும் உயிருக்குப் போராடியுள்ளனர். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ராமராஜேஷ் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அருணுக்கு சம்பவ இடத்தில் வைத்தே முதலுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*