
துாத்துக்குடி காமராஜ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று கொண்டனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகியவற்றின் கல்வி முகமையான தூத்துக்குடி கல்விக்குழுவின் பொதுக்குழு மற்றும் ஆட்சிக்குழு கூட்டம் இன்று (25.09.2018) தலைவர் இளங்கோ தலைமையில் காமராஜ் கல்லூரியின் பொன்விழா கட்டடத்தில் வைத்துநடைபெற்றது.
இந்த கூட்டத்தில் 2018-2021ஆம் ஆண்டுக்கான கெளரவ ஆட்சியாளர்களாக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் விபரம் வருமாறு, தலைவராக இளங்கோ, துணைத்தலைவராக திவாகர், செயலாளராக ராஜேந்திரன், இணைச்செயலாளராக மோகன்ராஜ், பொருளாளராக பழனிமுத்து, ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் கல்விக்குழுவின் ஆட்சிக்குழுக்கூட்ட உறுப்பினர்கள் அமர்நாத், சோமு, நடராஜன், சந்தனராஜ், ஆனந்தராஜ், நாகராஜன், மதியழகன், ராமச்சந்திரன், ராஜேந்திரன், ராஜசேகரன், சொக்கலிங்கம், மகேந்திரன் உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காமராஜ் கல்லூரிமுதல்வர் நாகராஜன்,சுயநிதிபாடப்பிரிவு இயக்குநர் டோனிமெல்வின், காமராஜர் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் கார்மெல் சுமிதா ஆகியோர் கல்லூரி,சுயநிதிபாடப்பிரிவு மற்றும் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மற்றும் மேம்படுத்தப்பட்டுள்ள நிகழ்வுகள்,திட்டங்கள் குறித்த அறிக்கையினையும், வருங்காலதிட்டஅறிக்கையினையும் விரிவாக எடுத்துரைத்தனர். கல்விக்குழுவின் ஆட்சிக்குழுஉறுப்பினர் முத்துச்செல்வம் நன்றியுரையாற்றினார்.
Please follow and like us:
Leave a Reply