துாத்துக்குடி மாநகராட்சியில் வேலை வாய்ப்பு : மாவட்டஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி தணிக்கைத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டஆட்சியர் சந்திப்நந்துாரி வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி மாநகராட்சி தணிக்கை, துணை இயக்குநர் அலுவலகத்தில் ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.இதற்கான கல்வித்தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க கூடாது. குறைந்தபட்ச வயது வரம்பு 18ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது பொது பிரிவினருக்கு 30, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் , பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 32, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயதும் இருக்க வேண்டும். மேலும், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு இனச்சுழற்சி பொதுப்போட்டி முன்னுரிமை பெற்றவர் தேர்வு செய்யப்படுகின்றனர்.
தகுதியானவர்கள் விண்ணப்பங்களை துணை இயக்குநர், உள்ளாட்சி நிதித்தணிக்கைத்துறை, மாநகராட்சி உடனிகழ் தணிக்கைப்பிரிவு, தூத்துக்குடி என்ற முகவரிக்கு வரும் 10ம் தேதி அன்றுமாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு வரப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தேர்வுமுறைகள் அனைத்தும் ஒளிவு மறைவற்ற வகையில்தான் மேற்கொள்ளப்படும் என்பதால், எந்தவிதமான இடைத்தரகர்களிடமும் யாரும் ஏமாற வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*