தூத்துக்குடியில் அடை மழை: சாலைகளில் வெள்ளம்

தூத்துக்குடி பகுதியில் விடிய விடிய பெய்த அடை மழை காரணமாக பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

தூத்துக்குடியில் பல மாதங்களுக்கு பின்னர் மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் தொடர்ந்து பெய்த அடை மழையால் பழைய மாநகராட்சி பகுதி, டபிள்யூஜிசி ரோடு, வி.இ. ரோடு, பாளை ரோடு, காய்கனி மார்க்கெட் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தூத்துக்குடியில் மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்து செல்கின்றன. சில தெருக்களில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளை சூழ்ந்துள்ளதால் மக்கள் தவித்து தவித்து வருகின்றனர். மின்கம்பங்கள் அருகே நீர் தேங்கி உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*