புதுப்பொலிவு பெறும் தூத்துக்குடி பேருந்து நிலையம் : மாநகராட்சி ஆணையர் தகவல்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் லிப்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் மாநகராட்சி சீர்மிகுநகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சிப்பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள் தூத்துக்குடி மாநகராட்சி சீர்மிகுநகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. தற்போது மாநகரத்தின் மையப்பகுதியில் செயல்பட்டு வரும் பழைய பேருந்து நிலையம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் மேற்படி பேருந்து நிலையம் 1.53ஏக்கர் பரப்பளவில் 7 பேருந்து நிறுத்த வழித்தடங்களுடன், அரசு மற்றும் தனியார் மொபசல் பேருந்துகள் 987 நடைவீதமும், மினிபேருந்துகள் 280 நடைவீதமும், ஆக மொத்தம்நாளொன்றுக்கு 1267 நடை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேற்கண்ட பழைய பேருந்து நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உத்தேசமாக ரூ51.00 கோடி மதிப்பீட்டில் 4 மாடி கட்டிடங்களுடன் மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. பழையபேருந்து நிலையத்தின் இடப்பற்றாகுறை காரணமாக அருகில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான டெப்போவை இணைத்து 3.36ஏக்கர் பரப்பளவில் புதிய பொலிவுடன் தரைதளத்தில் வெளியூர் மற்றும் மினி பேருந்துகள் நிறுத்த ஏதுவாக 31 பேருந்து நிறுத்த வழித்தடங்களுடன் 6 நவீன கழிப்பறை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது.
மேலும் பழையபேருந்து நிலையத்தில் பேருந்துகள் இயக்கம் குறித்த விசாரனை மையம், பேருந்துகள் முன்பதிவு மையம், காவல் கட்டுப்பாட்டு அறை, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு தனி அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, சுகாதார அலுவலர் அறை, தானியங்கி பணம் பெறும் இயந்திரம் மற்றும் மருந்து கடை ஆகியன கட்டப்படவுள்ளன. கூடுதலாக பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணிகள் தங்குவதற்கு 60 இருக்கைகளுடன் கூடிய குளிர்சாதான அறை ஒன்றும், 131 இருக்கைகளுடன் கூடிய சாதாரண அறை ஒன்றும் நிறுவப்படவுள்ளது. இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனகளில் வரும் பொதுமக்கள், பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல ஏதுவாக தனியாக இரண்டு பிக்அப் பாயின்ட் அமைக்கப்படவுள்ளது.
வாகன நிறுத்துமிட வசதியுடன் ஒவ்வொரு தளத்திலும் சுமார் 500 இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்த ஏதுவாக அமைக்கப்படவுள்ளது. மேலும் பொது மக்கள் முதல் தளம், 2வது , 3வது மற்றும் 4வது தளத்திற்கு செல்ல ஏதுவாக ஒவ்வொரு தளத்திலும் 2 எண்ணம் Escalator அமைத்தும், 2எண்ணம் மின்தூக்கி(லிப்ட்) அமைக்கப்படவுள்ளது. மேற்கண்ட பணிகள் அனைத்தும் முடிவுபெற்றபின்னர் பழையபேருந்து நிலையம் புதுப்பொலிவு பெற்று மிடுக்கான தோற்றத்துடன், நவீனமுறையில் மாநகரப்பகுதி பொது மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கும் என மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Please follow and like us:

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*